கல்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கு நுள்ளிவிளையில் முத்தாரம்மன் கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது அதன்பிறகு பணிகள் நிறைவடைந்த பிறகும் இதுவரை சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் குண்டும், குழியுமாக காணப்படும் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஜோசப்பின், நுள்ளிவிளை.