தர்மபுரி- திருப்பத்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் ஏரிக்கரை பகுதியில் தார்சாலை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.