திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் தீர்த்துதங்கிரியம் சாதிக் பாஷா தெரு செல்லும் வழியில் சாலை சேரும் சகதியுமாக இருக்கிறது. சிறிய மழை பெய்தாலும் இந்த சாலை முழுவதும் பயன்படுத்த முடியாத அளவில் அமைகிறது. இவ்வாறு இருப்பதால் குழந்தைகள் பெரியவர்கள் என அந்த சாலையின் வழியே செல்லும் மக்கள் வழுக்கி விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் நலன் கருதி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.