நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரியில் இருந்து செம்பியமாகுடி செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.