அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-11-27 14:08 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக வழிமறிச்சான்- வீரசோழன் பிரதான சாலை வாகனங்கள் பயணிக்க தகுதியற்ற சாலையாக உள்ளது. மேலும் தெருவிளக்குகள் இல்லாததால் வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இக்கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்