கிருஷ்ணகிரியில்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்னும் இடத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி நகரில் காந்தி ரோட்டில் இயங்கி வந்த அரசு மருத்துவமனையின் பெரும்பாலான பிரிவுகள் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது . இதனால் நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக அங்கு செல்ல வேண்டி உள்ளது. கிருஷ்ணகிரி நகரில் இருந்து போலுப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அதிக அளவில் பஸ் வசதி இல்லை. குறிப்பாக ஓசூர்-பெங்களூரு செல்லக்கூடிய பஸ்களில் பெரும்பாலானவை அரசு மருத்துவக் கல்லூரி முன்பு நின்று செல்வதில்லை . இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரியில் இருந்து கூடுதலாக டவுன் பஸ்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், கிருஷ்ணகிரி.