சாலையை சீரமைப்பார்களா?

Update: 2022-11-27 09:19 GMT

வெள்ளிகோடு சந்திப்பில் இருந்து சடையங்கால் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும், அந்த சாலையின் காரணமாக வந்து கொண்டிருந்த 6 'சி' அரசு பஸ் தற்போது முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி கிராம மக்கள், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைப்பார்களா?.

-மேகிள், வெள்ளிக்கோடு

மேலும் செய்திகள்