காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சியில் இருந்து கீழக்கரை, நந்திமங்கலம், வடக்கு மாங்குடி, தெற்கு மாங்குடி, வல்லாந்துறை, வல்லம்படுகை வரை சுமார் 13 கிலோமீட்டர் தார் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் விபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.