திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவமனை எதிரில் காந்திபுரம் விநாயகர் கோவில் தெரு உள்ளது. பொதுமக்கள் அதிகமாக பயணம் செய்யும் இப்பகுதியில் உள்ள பிரதான சாலை நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கும்சிரமமாக இருக்கிறது. சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?