குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-23 12:26 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு அருகே சந்தகுன்னு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்