சாலை வசதி தேவை

Update: 2022-11-23 11:53 GMT

மதுரை மாவட்டம் வில்லாபுரம் அவுசிங்போர்டு 84-வது வார்டு சித்தர் தெருவில் சரியான சாலை வசதி இல்லை. மண் சாலையாக காணப்படுவதால் சிறிய மழை பெய்தாலும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சரியான சாலை வசதி அமைத்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்