குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-11-20 10:36 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 10-வது வார்டு அரியலூர் கிராமத்துக்கு செல்லும் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்