பெங்களூரு ஹெப்பால் பகுதியில் மண்டயா டெக் பார்க் உள்ளது. இங்கு ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் டெக் பார்க்கின் 5-வது கேட் அருகே செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்த சாலையில் பல நாட்களாக தண்ணீர் தேங்கி உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த வழியாக செல்கின்றன. சாலையின் மோசமான நிலையால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?