கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் பல வார்டுகளில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன . குறிப்பாக கோ ஆப்பரேட்டிவ் காலனி சுற்றுவட்டார பகுதியில் சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே நகரில் கோ ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.