வலங்கைமான் பேரூராட்சி பகுதி குடவாசல் - பாபநாசம் மெயின்ரோட்டில் கீழ தெரு உப்பு கார தெருவை இணைக்கும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் எப்பொழுதும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்கள்வேகமாக செல்வதால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?