ஆத்தூர் பகுதியில் இருந்து கல்லாநத்தம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக ஆத்தூர், குற்றாலம், முட்டல்ஏரி, துலுக்கனூர், அம்மம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.