அரியாங்குப்பம் புறவழிச்சாலை மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக பாலத்தின் இருபுறங்களிலும் நடைபாதைகள் உள்ளன. இதில் ஒரு பகுதி நடைபாதை சேதம் அடைந்துள்ளதால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.