கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே உள்ள நஞ்சைபுகழூரிலிருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக தார்சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்நிலையில் நஞ்சைபுகழூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு வருகிறது. கதவணை கட்டும் பணிக்கு லாரிகளில் ஜல்லிகள், கம்பிகள், சிமெண்டு மற்றும் பல்வேறு பொருட்கள் தினமும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழுதடைந்த தார்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த தார்சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.