பெங்களூரு பனந்தூர் பகுதியில் வர்த்தூர் செல்லும் சாலையில் ரெயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகே குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகள் உடைந்தும், ஜல்லி கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.