கீழக்கடையம் ரெயில் நிலையத்தில் இருந்து வடக்கு ரெயில்வே கேட் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.