திண்டுக்கல்லில் இருந்து ஏ.வெள்ளோடு செல்லும் சாலையில், திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகில் ஒத்தக்கண் பாலம் பகுதியில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஒத்தக்கண் பாலம் குறுகிய பாதையாக இருப்பதால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.