விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை-திருச்சுழி சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.