கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, ராயக்கோட்டை சாலை, பெங்களூரு சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது .குறிப்பாக சாலைகளில் இருசக்கர வாகனங்கள் ரோட்டில் பெரும் பகுதிக்கு வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது . அதேபோல டவுன் பஸ்கள் நீண்ட நேரம் பஸ் நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதால் ஏராளமான வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே பஸ் உடனடியாக புறப்பட்டு செல்லும் வகையிலும் , இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் சாலை வரும் நிறுத்தம் வகையிலும் போக்குவரத்து பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.