தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் ராமாக்காள் ஏரி முதல் பழைய தர்மபுரி பகுதி வரை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பகுதியில் மின்விளக்குகள் இரவு நேரத்தில் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையின் மைய பகுதியில் வெள்ளை கோடுகள் அமைக்க வேண்டும். தேவை உள்ள இடங்களில் பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும்.