நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லும் சாலையில் உள்ள தரைமட்ட பாலம் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனை சீரமைப்பதற்காக சரள் மண் கொட்டப்பட்டது. தற்போது பெய்த மழையில் பாலம் முழுவதும் உருக்குலைந்து சேறும் சகதியுமாக உள்ளது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.