குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-06 13:27 GMT
கரூர் -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சில ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தரமற்ற தார்சாலை போட்டதால் தார் சாலை நெடுகிலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த தார் சாலை வழியாக டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை, காகித ஆலைக்கு பல்வேறு மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் செல்கின்றன. அதேபோல் 2 ஆலைகளிலிருந்தும் சிமெண்டு மூட்டைகள், காகித ரோல்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல் புன்னம் சத்திரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான லாரிகளில் ஜல்லிக்கற்கள், செயற்கை மணல்கள், கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள் என பல்வேறு வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்