விருதுநகர்- அல்லம்பட்டி செல்லும் மெயின்சாலையானது சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் தொழிற்சாலைகள் உள்ளன. வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் மழையின் காரணமாகவும் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு உதவ வேண்டும்.