நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தென்னம்புலத்தில் இருந்து செட்டிபுலத்திற்கு செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.