கடையம் யூனியன் கோவிந்தப்பேரியில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை முழுவதும் சேதமடைந்து ராட்சத பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. எனவே, சேதமடைந்த சாலையை அகற்றி விட்டு, புதிய சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.