கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலையில் ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. விபத்தை தடுப்பதற்காக போலீசார் தடுப்பு வேலியை வைத்துள்ளனர். ஆனால், 20 நாட்களுக்கு மேலாகியும் பள்ளம் சரி செய்யப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளத்தை நிரப்பி சாலை போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமதாஸ், சந்தையடி.