ராமநாதபுரம் மாவட்டம் சிலுகவயல் கிராமத்தில் உள்ள சாலை ஜல்லி கற்கள் பெயற்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயனிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.