நாகையை அடுத்த கொத்தமங்கலம் பகுதி திட்டசேரி-அனந்தநல்லூர் வழியாக கொத்தமங்கலம் சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெயர்ந்து கிடக்கம் கற்களால் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?