வேகத்தடை வேண்டும்

Update: 2022-10-30 15:19 GMT

நாகை கிழக்கு கடற்கரைசாலையில் இருந்து நகருக்கு வரும் முக்கிய சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள சாலையை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும், அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்