பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி, காமசந்திரா சாலையில் கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி அந்த உடைப்பை சரிசெய்தனர். ஆனால் அந்த பள்ளத்தை அவர்கள் மூடாமல் உள்ளனர். இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.