பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன. இதனால் பஸ்சில் பயணிக்க வருபவர்கள் அந்த பகுதியில் உள்ள கம்பிகளால் அவதி அடைகின்றனர். அவர்கள் சாலையில் நின்றபடி பஸ்களுக்காக காத்து நிற்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கம்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.