கோவை மணியகாரன்பாளையம் அத்திப்பாளையம் பிரிவில் இருந்து சின்னவேடம்பட்டி செல்லும் சாலை பெயர்ந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மழைக்காலத்தில் அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.