நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளி வாசலுக்கு கீழ் பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் வேகத்தடையில் வர்ணம் பூசாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்ககிறார்கள் என்று ஆவுடையாள்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தினத்தந்திக்கு அனுப்பிய பதிவு கடந்த 14-ந் தேதி செய்தியாக பிரசுரமானனது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வர்ணம் பூசியுள்ளனர். கோரிக்கை உடனடியாக நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையைும் பாராட்டையும் தெரிவித்து உள்ளார்