நாகை கிழக்குகடற்கரை சாலையில் மேலப்பிடாகை பகுதி உள்ளது. இந்த பகுதியின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த சாலையில் கடைத்தெரு பகுதியில் சாலையின் நடுவே பள்ளம் உள்ளது. இந்தபள்ளம் இருப்பது தெரியாமல், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.