தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து கோடியூருக்கு செல்லும் தார்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. சாலை வழியாக நாள்தோறும் பள்ளி கல்லூரி வாகனங்கள், ஆட்டோக்கள் என பல்வேறு வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு சென்று வரும் வாகனங்கள் குண்டும், குழியுமான சாலையில் சிக்கி நிலைதடுமாறி ஏரிக்கரையின் இருபுறமும் உள்ள பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்தில் சிக்குகின்றனர். குண்டும், குழியுமான சாலையை விரிவுப்படுத்தி தரமான சாலை அமைக்ககோரியும், சாலையின் இருபுறமும் பாதுகாப்பான தடுப்புகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.