குமராட்சி அருகே வெள்ளூர் கிராமத்தில் இருந்து தில்லைநாயகபுரம் வரை உள்ள சுமார் ௬ கிலோ மீட்டர் தூரமுள்ள கொள்ளிடக்கரை சாலை சேதமடைந்து ஜல்லிகள் அனைத்தும் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.