கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் மங்கலம் பகுதியிலிருந்து மேல் சிறுவலூர் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவகின்றனா். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.