திசையன்விளை அருகே மன்னார்புரத்தை அடுத்த துவரம்பாடு- சங்கனாங்குளம் இடையே சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையோரம் அடர்ந்து வளர்ந்த சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.