தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் சாலை பழுதடைந்து மழை நீர் தேங்கியதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த சாலையை சீரமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.