நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் சாலை விரிவாக்கம் பணிகளில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்கள், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.