கோவை மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் பார்க் டவுன் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க குழிகள் தோண்டப்பட்டது. அதன்பின்னர் சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.