முத்துப்பேட்டை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இந்த சாலை மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி விடுவதால் வாகனஓட்டிகள்மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.