குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-10-23 09:55 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா வரம்பியம் ஊராட்சி வடக்கு தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும்,குழியுமாக காட்சி அளிப்பதால் அந்த தெருவின் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த மின்கம்பத்தை கடந்து செல்வோர் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி தருவதோடு, சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்