தார்ச்சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-10-23 09:54 GMT

நீடாமங்கலம் புதுத்தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்