காட்டுமன்னாா்கோவில் தாலுகா குமராட்சி அருகே கீழக்கரை மெயின் ரோட்டில் இருந்து முள்ளங்குடி கிராமம் வரை உள்ள சாலை சேறும், சதியுமாக உள்ளது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால் பள்ளத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் அடிக்கடி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.