சேலம் மாநகராட்சி 22 -வது வார்டுக்கு உட்பட்ட சிவதாபுரத்தில் இருந்து ஆண்டிபட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் சாலை நடுவே உள்ள பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
-முனுசாமி, ஆண்டிப்பட்டி, சேலம்.